மகிழ்ச்சியை எப்படி உணர்வது?
எம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் அழகாக இருக்கிறோம் என்று ஆச்சரியப்படுவோம் மகிழ்ச்சி என்பது மன அமைதி, மனஆறுதல், திருப்தி, சந்தோசம் போன்ற உணர்வுகளுடன் தொடர்பான நல் வாழ்வுநிலை என குறிப்பிடலாம். பொருளால், புகழால், பணத்தால், பலத்தால், சமூக அந்தஸ்தால் மனமகிழ்ச்சியை அடையாளம் என்று நினைப்பவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை. இவை எவற்றாலும் மனமகிழ்ச்சியை அடைய முடியாது என்று நம்புகின்றவர்களும் எம்மில் இருக்கின்றனர். ஆம்…! நாம் எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். மனஅமைதியை தேடுகிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள்,
மற்றவர் நிலை அறிந்து பேசுவோம்
மற்றவர் நிலை அறிந்து பேசுவோம் மரியாதை என்பது மற்றவர் யாராக இருந்தாலும் அவருடன் அழகாக நடந்துகொள்வதாகும் நகரம் ஒன்றில் கண்பார்வையற்ற ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் பார்வையற்றவராக இருந்தாலும் இரவில் வெளியே செல்லும் போதெல்லாம் ஒரு ஒளிரும் விளக்கை தன்னுடன் எடுத்துச் செல்வார். ஒரு நாள் கடையில் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தனது வீட்டைநோக்கி நடந்து வந்துகொண்டிருந்தபோது இளம் பயணிகள் சிலர் அவருக்கு குறிக்கிடுகின்றனர். அவர் குருடாக இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் ஒளிரும்
பிள்ளைகளை வளர்ப்பதா? வளர வழிகாட்டுவதா?
நாம் ஒவ்வொரு நாளும் நம் பிள்ளைகளின் நினைவாகத்தில் ஏதோ ஒன்றை வைப்புச் செய்கிறோம். ஒரு குட்டி உதாரண கதை மூலம் பிள்ளை வளர்ப்பின் தன்மையினை நாம் புரிந்துகொள்ள முயற்சிப்போம். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரும் பொறியியலாளர் ஒருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஒரே விதமான தாவரங்களை நட்டினர். ஆசிரியர் தனது தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பசளையும் இட்டு கவனித்து வந்தார். பொறியியலாளர் அதற்கென்றே நேரத்தை ஒதுக்கி நன்கு நீர் ஊற்றி நல்லரக
யார் அழகானவர்? நீங்கள் அழகானவரே
யார் அழகானவர்? நான் அழகானவரா….? அழகானவர் எப்போதும் தனக்கு உண்மையானவராக இருப்பார் கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டவர்களும் கட்டான உடலை கொண்டவர்களும் நாகரீகமாக வாழ்கின்றவர்களும் தான் அழகானவர்கள் என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல இதயத்தின் அழகும் நடத்தையின் அழகும் ஒருங்கிணைந்து வெளிப்படுவதே மனினுக்கு அழகாகும். அதுவே மனிதனின் அழகாகும் உடலை மட்டும் அழகுபடுத்துவது குற்றம் சொல்லக்கூடிய அழகாகலாம் இதயத்தையும் நடத்தையையும் அழகுபடத்துவது பாராட்டப்படக்கூடிய அழகாகலாம் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்தும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கொஞ்சம்
மரியாதை; வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம்
மதிப்பும் மரியாதையும் வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம் நாம் ஒவ்வொருவருடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வதை எதிர்பார்க்கின்றோம். மதிப்பும் மரியாதையும் உறவை வளர்ப்பதிலும் வலுப்படுத்துவதிலும் மிகப்பெரும் தாக்கம் செலுத்தும் விடயங்களாகும். மரியாதையின் உயரிய பண்புகளை வெளிப்படுத்திய நபிகளாரின் அற்புத வாழ்வியல் கலையை நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் ரழி கூறும் விதம் எமக்கு அழகாக உளவியல் பாடம் கற்பிக்கிறது. “நான் நபிகளாருக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்தேன். அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தேன். ஒரு முறைகூட அவர் என்னை
எதிர்மறை எண்ணங்களை வெல்வது எப்படி?
எதிர்மறை எண்ணங்களை வெல்வது எப்படி? எங்கள் மனதில் பூக்களையும் வளர்க்கலாம். களைகளையும் வளர்க்கலாம். எதிர்மறை எண்ணம் என்பது நாம் எம்மை பற்றியும் எம்மை சுற்றியுள்ளவை பற்றியும் பிழையாக, தவறாக அல்லது மோசமாக சிந்திக்கும் முறையை குறிக்கிறது. தொடர்ந்து நாம் எதிர்மறை எண்ணங்களை அனுபவிக்க ஆரம்பித்தால் அப்படியே அந்த அனுபவம் நீடித்தால் நாம் எம்மை பற்றியும் நாம் வாழும் உலகத்தை பற்றியும் நினைக்கும் விதத்தை தீவிரமாக பாதிக்கச் செய்துவிடும். நாம் நினைக்கும் விதத்தின் விளைவு ஒன்றோ நன்மை தரும்
எப்போது உள்ளம் தூய்மை மற்றும் அமைதியை அடையும்
“தூய்மையான உள்ளம்” தூய்மையான உள்ளம் அமைதியான உள்ளமாகும் உள்ளம் திறந்து செய்கின்ற வேலைகள் மட்டுமே முழுமை அடையும், வெற்றியும் பெறும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். தெளிவான, பலமான, பண்பான, நம்பகமான, ஊக்கமான, உயிரோட்டமான குணங்களை கொண்ட உள்ளம் அழகும் ஆரோக்கியமும் கொண்டு ஆன்மீகத்தால் அலங்காரமான உள்ளமாக இருக்கும். இது நல்ல உள்ளமாக செயற்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நல்ல உள்ளம் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்க்கப்பட வேண்டும். உண்பதில், உறங்குவதில், படிப்பதில், படிப்பிப்பதில், கொடுப்பதில்,
வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம்
வளமான வார்த்தைகள் ———————– வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம் சுய கவனிப்பு அல்லது எம்மை நாம் கவனித்துக்கொள்வது பற்றி சிந்திக்கும் போது நாம் பேசும் வார்த்தைகளை கருத்தில் கொள்ளவது மிக மிக முக்கியமாகும். நாம் நினைக்கின்றோம். நினைத்துவிட்டு பேசுகின்றோம். நாம் நினைக்கின்றவை பெரும்பாலும் எமது வாயிலிருந்து வெளியே பாய்ந்து மற்றொருவரின் காதுகளில் இலேசாக புகுந்துகொள்கின்றன. அப்படி புகுந்துவிட்ட வார்த்தைகளை எம்மால் ஒருபோதும் வெளியே எடுத்துவிட முடியாது. நாம் எம்மை பற்றி உணர்கின்ற விதத்திலும் மற்றவர்கள்
18 நல்ல குழந்தை வளர்ப்பு முறைகள்
நலமான பிள்ளை நல்ல வீட்டிலிருந்தே நல்ல பிள்ளைகள் வருகிறார்கள் பிள்ளைகளை வெறுமனே ஆசிரியர்களிடம் அல்லது பாடசாலையிடம் ஒப்படைத்துவிட்டு இருந்துவிடாமல் அவர்களின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் நலமான மாற்றம் ஏற்படுவதற்கு உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருக்கே இருக்கின்றது. அதற்கான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகின்றோம். அடிக்கடி பிள்ளையுடன் உரையாடுங்கள் பிள்ளை ஒருவிடயத்தை பார்க்கும் விதம் பெற்றோர் பார்க்கும் விதத்தைவிட மிகவும் வித்தியாசமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள் குறைந்தது ஒரு நாளில் 30 நிமிடங்களையாவது பிள்ளையுடன் வாசிக்க வாசித்துக்காட்ட செலவிடுங்கள்
வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி ?
வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி ? வாசிப்பு புரியவில்லை என்றால், சரியாக வாசிப்பைப் படிக்கவில்லை என்றாகிவிடும் எந்தவொரு விடயத்தை வாசிக்கும்போது வாசிப்பதற்கான நோக்கம் இருப்பது மிக முக்கியமாகும். இது வாசிப்பதை நினைவில் கொள்வதற்கான முதற்காரணமாகும். நான் ஏன் இதை வாசிக்கிறேன்? வாசிப்பதன் மூலம் எதை கற்கப்போகிறேன்? என்பதை புரிந்தால் மட்டுமே வாசிப்பின் பயனை அடையலாம் • வாசிக்கும் விடயத்தில் ஆசை, ஆர்வமாக இருத்தல் • கவனத்தை வாசிப்பில் நிலைநிறுத்திக்கொள்ளல் • வாசிக்கும் விடயத்துடன் சார்ந்த காட்சிகளை
இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு
இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு இனிமையான சொற்களாகும் நாம் பிள்ளைகளோடும் ஏனையவர்களோடும் உரையாடும் போது நாம் எமது சொற்களை எப்படி வெளிபடுத்துகிறோம் என்பதை கட்டாயம் கவனித்துப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். • பிள்ளைகளும் மற்றவர்களும் மதிக்கப்படக்கூடிய விதத்தில் எமது சொற்களை வெளிப்படுத்துகிறோமா? • எமது குரலிலும் நாம் வெளிப்படுத்தும் சொற்களிலும் நாம் அவதானம் செலுத்துகிறோமா? • நாம் உரையாடும் பொழுது எமது முக பாவனையும் ஏனைய உடல் உறுப்புகளும் செயற்படும் விதத்தை தெரிந்துவைத்திருக்கிறோமா? • எமது சொற்கள் பிள்ளைகளையும் மற்றவர்களையும் எம்
மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன
நாம் விசேடமானவர்கள் We Are Special மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன நான் விசேடமானவர் என்ற உணர்வு உங்களுக்கு எப்பொழுதாவது வந்ததுண்டா? வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் அந்த உணர்வு எங்கிருந்து வந்திருக்கும்? அதன் அர்த்தம் எதுவாக இருக்கும்? என்று நாம் தேடிப்பார்ப்போம். நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் விசேடமானவர்கள். மனிதர்களாகப் பிறந்திருப்பதே நாம் விசேடமானவர்கள் எனபதற்கான மிகச் சிறந்த ஆதாரமாகும். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் ஒப்புவமை அற்றவர்கள் ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர் ஒவ்வொருவரும்
அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது
மோசமான ஏச்சுப் பேச்சுக்கள் அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது கற்களும் கம்புகளும் எமது எலும்புகளை முறித்துவிடலாம். ஆனால் வார்த்தைகள் அப்படி எம்மை நோவிப்பதில்லை என்று சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும் அதன் வலி. சில வார்த்தைகள் மனதை உசுப்பி உறுத்தி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். ஒருவர் மனதில் தோன்றும் வலியின் அளவை, அதன் கனதியை மற்றொருவரால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது. நாம் வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும்
‘இல்லை ‘என்று சொல்வது ‘முடியாது’ என்று சொல்வது வார்த்தைகளால் மட்டும் நடப்பதில்லை.
தவறு ஒரு தோல்வி அல்ல நாம் தவறு செய்யும்போது அல்லது ஒரு பிழை விடும்போது சிலசமயம் நாம் நம்மீது கடினமாக நடந்துகொள்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் நாம் ஏன் நம்மிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும்? இது சரிதானா? முறைதானா? சிந்தித்துப் பார்ப்போம் எங்களால் ஏதேனும் தவறு நடந்தால்…. உடனடியாக எமது தவறை எப்படி திருத்துவது என்று சிந்திக்க நம் மனதிற்கு இடம் கொடுக்க வேண்டும் விடயங்கள் சரியாக நடக்காத நேரங்களில் நாம் எப்படி செயற்படுகிறோம் என்று நம்மை
நம்பிக்கையுடன் வாழ்வதே உற்சாகமாக இருப்பதற்குக் காரணம்
நம்பிக்கையுடன் இருப்போம் சிலர் மிகவும் கடினமான நேரங்களில் கூட உற்சாகமாக இருக்கின்றார்கள். ஆம்… அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்று நாம் கேட்கலாம் நம்பிக்கையுடன் வாழ்வதே அவர்கள் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம் ஆனால் நாம் கேட்க வேண்டிய சிறந்த கேள்வி… கடினமான நேரங்களில் “நான் எப்படி உற்சாகமாக இருப்பது❓ என்பது தான்” நம்பிக்கை என்பது …. எதிர்பார்ப்பு வெற்றி மற்றும் நேர்மறையான எதிர்காலம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு மனோபாவமாகும். “நம்பிக்கையாக இருப்பது என்பது…. எதிர்காலத்தைப் பற்றி