சுயமரியாதை
நாம் மற்றவருக்கு மரியாதை செலுத்துவதன் அவசியம் பற்றி கதைக்கிறோம். மரியாதையின் தேவையை அதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு விளங்க வைக்கிறோம். மரியாதை செலுத்துவதன் அவசியம் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோம். ஆனால் எமக்கு நாம் மரியாதை செலுத்துவதை பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகிறோம். ஒருவர் அவர் மீது செலுத்தும் மரியாதையை அல்லது கௌரவத்தை சுயமரியாதை என்று அழைக்கப்படுகிறது. நாம் நம்மீது மரியாதை செய்ய வேண்டுமா? நாம் நம்மீது கௌரவம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்விகள் சாதாரணமாக எமக்குள் உருவாகலாம்.
தாய்மை தாங்கக்கூடாத வலிகள்
பெண்ணின் மென்மையையும் அவளது மதிப்பையும் புரிந்து கொண்ட கணவன் தன் கடமைகளை தவறவிடுவதில்லை ஒரு தாய் பல வழிகளில் மனக் காயங்களை, மன வலிகளை அனுபவிக்கலாம். மனவலிகள் பலவிதங்களில் அவளை உரசிப் பார்க்கலாம். இருந்தாலும் அவள் அனுபவிக்கும் வலிகளில் மிகப் பெரியதும் மிக மோசமானதுமான ஒரு வலி அவள் கணவனால் அவளுக்கு வரும் மனவலி. பொறுப்பற்ற, கவனக்குறைவான, அன்பு ஆதரவு கொடுக்காத, அவ்வாறே போதைகளுக்கு அடிமையாகியுள்ள கணவன் தாங்க முடியாத வலிகளை தன் மனைவிக்கு கொடுக்கலாம். பிள்ளைகளோடு
தற்கொலைகள்
வாழ்க்கையில் சவால்கள், சங்கடங்கள், இழப்புகள் தவிர்க்க முடியாதவை. இவற்றை கண்டு ஓடி ஒளியவோ, முகம் கொடுக்க பயந்து வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளவோ தேவையில்லை. நாம் அனைவரும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவே இந்த உலகிற்கு வந்திருக்கின்றோம். வாழ்க்கையை பயனின்றி வாழவும் சங்கடங்களை சந்திக்க வேண்டி ஏற்படும் போது அவற்றை சந்திக்க முயற்சிக்காமல் வாழ்க்கையை அழித்துக்கொள்ள எமக்கு எந்த வகையிலும் அதிகாரம் தரப்படவில்லை. ஆனால் சிலர் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையை மாய்த்துக் கொள்வதை அல்லது தற்கொலை செய்து கொள்வதை
வாழ்க்கையை அளவிடுதல்
நாம் சிலசமயம் மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து எமது வாழ்க்கையை அளவிட்டுப்பார்க்கிறோம். அவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள்….. அவர்களுக்கு எதுதான் இல்லை…..நாம் எப்படி வாழ்கிறோம்……அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்…. இப்படி பல கோணங்களில் எமது வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையுடன் அளவீடு செய்கிறோம். இப்படி எமது வீட்டை, பொருளை, உடலமைப்பை, அறிவாற்றலை என பலவற்றை அளவீடு செய்கிறோம். அதிகப்படியான அளவீடு மனமகிழ்ச்சியை குறைத்து சுயமரியாதையை இல்லாமல் ஆக்கிவிடும். எங்களை விரக்தியில் ஆழ்த்திவிடும். மற்றவர்கள் முன் கோபப்பட வைத்துவிடும். அளவீடுகள் தொடர்ந்தால் பொறாமை
தெளிவான இலக்கும் நிறைவான பயணமும்
“பயணம் தெளிவானால் பாதையும் தெளிவாகும்” நாம் வாழ்க்கையில் இலக்குகளுடன் அல்லது எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறோம். அப்படி நகர்ந்தாலும் சிலசமயங்களில் அடைய ஆசைப்படுவதை அடைய முடியாது போகும் சந்தர்ப்பங்களை சந்திக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்மால் அடைய வேண்டியவற்றில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். சில சமயங்களில் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சரியாக செய்யாததனாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகத் தெரியாததனாலும் நாம் இவ்வாறான நிலைகளை சந்திக்க நேரிடுகிறோம். எங்கள் பார்வையும்
தோல்வி நம்மை வலுவாக்குகிறது
பலர் தோல்வியைப் பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கலாம். தோல்வியை சந்தித்த பயப்படலாம்…. ஆனால் உண்மையில், தோல்விகள் மிகவும் நல்ல தரத்தை, தைரியத்தை எம்மில் உருவாக்குவதற்கான அழகான வாய்ப்புகளை தருகின்றன. பலதடவைகள் தோல்விகளை சந்திப்பவர்களை நாம் பார்த்திருக்கலாம். தோல்வி நம்மை வலுவானவர்களாகவும் நெகிழ்ச்சியுடையவர்களாகவும் ஆக்குகிறது. மீண்டும் மீண்டும் தோல்வியடைபவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு விடாமுயற்சியை வளர்த்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் எட்டு தேர்தல்களில் தோல்வியடைந்தார், இரண்டு முறை வியாபாரத்தில் தோல்வியடைந்தார். மிகப்பெரிய அமெரிக்க ஜனாதிபதிகளில்
எங்களை மேம்படுத்துவதற்கான ஒரே ரகசியம்.
“குறைவாக பேசு அதிகமாக வேலை செய்” பேசுவதை விட எங்களின் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த ரகசியம். ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ரகசியம் இது. படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும், இந்த ரகசியம் பலருக்குப் பலனாகவே இருந்து வருகிறது. “குறைவாக பேசு அதிகமாக வேலை செய்” என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இதன் முதல் படி, எங்கள் நேரம் மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொள்வது… இரண்டாம் படி, பேசுவதை
மகிழ்ச்சியாக இருக்க
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல வழிகள் தேடுகிறார்கள். மகிழ்ச்சியாக இருப்பதற்கு நல்ல அதிர்ஷ்டம், புதிய சூழ்நிலைகள் எதுவும் தேவையில்லை. சொத்து செல்வம், அறிவு ஆற்றல் என்பனவும் தேவை இல்லை. வேடிக்கையான செயல்பாடுகள், வெற்றிகள், சாதனைகள் அதிகாரம், அந்தஸ்து என்பனவும் தேவையில்லை. இவை எதுவும் இல்லாமல் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அப்படியானால் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? அது நமக்குள் தான் இருக்கிறது. வானமும் காற்றும் நமக்கு வெளியே இருப்பதை போலவே மகிழ்ச்சி நமக்குள்ளேதான் இருக்கிறது. நம்மை சுற்றித்
போராளியின் சிறந்த நண்பன்
நாம் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களுக்கு முகம் கொடுக்கவும் சில விடயங்களை செய்யவும் பயப்படுகிறோம். பயம் என்பது நாங்கள் உண்மையிலேயே விரும்புவதை நோக்கிச் செயல்படுவதை தடுக்கும் காரணியாகும். பயம் எம்மை திசை திருப்பிவிடும் பலத்தை கொண்டது. அதேநேரம் சாக்குப் போக்குகளுக்கு வழிவகுக்கவும் செய்கிறது. ஆனால் பயம் ஒரு சாதாரண எதிர்வினை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ‘பயம் ஒரு போராளியின் சிறந்த நண்பன்’ என சொல்லப்படுகிறது. அதனால் பயம் என்பது வெட்கப்படக்கூடயதொன்றல்ல. பயம் எங்களை கூர்மையாக
எங்கள் எண்ணங்களின் உள்ளடக்கம் எங்கள் மனநிலையின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கிறது.
அதாவது எங்கள் எண்ணங்கள் எப்படி இருக்குமோ எமது மனநிலையும் அப்படியே இருக்கும். நாம் இதை இப்படி யோசித்துப் பார்ப்போம்…. நாங்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால், நாங்கள் மிகுந்த கவலையை உணரப் போகிறோம் என்று பொருள் கொள்ளலாம். நாங்கள் எப்போதும் கடந்தகால தவறுகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால், நாங்கள் மிகவும் வெட்கப்படப்போகிறோம் என்று பொருளாகிவிடும். நாங்கள் அநீதி இழைக்கப்பட்டுவிட்டோம் என்று எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருந்தால், நாங்கள் மிகவும் கோபத்தை உணரப் போகிறோம் என்றாகிவிடும். இவைகள் எல்லாமே
இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்வேம். எனக்கு கிடைத்திருப்பது எனக்கானவை
ஒரு மீனவன் கடற்கரைக்கு அருகாமையில் பரந்து விரிந்த கிளைகளுடன் இதமான நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓர் மரத்தடியில் அமைதியாக சாய்ந்தவாறு கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு செல்வந்தர் அவனை பார்த்து… ‘நீ மீன் பிடிக்கச் செல்லாமல் ஏன் கடலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார். ‘இன்றைய நாளுக்குத் தேவையான மீன்களை நான் பிடித்து விட்டேன்’ என்று அந்த மீனவன் மிகவும் அமைதியாக பதில் கொடுத்தான். அதைக் கேட்ட அந்த செல்வந்தர் சற்றுக்கோபம் அடைந்தவாறு… ‘எந்தக்காரணமும் இல்லாமல்
எப்படி முன்னால் சிந்திப்பது
“முன்னால் சிந்திப்பது” THINKING AHEAD எதிர்காலத்தைப் பற்றிய அல்லது எதிர்காலத்தை பயனுள்ளதாக ஆக்குவதற்கான வழிமுறைகளில் ஈடுபடும் திறனுக்குப் பயன்படுத்தப்படும் சொல்தான் ‘முன்னால் சிந்திப்பது’ நாளை என்ன நடக்கலாம் என்று யோசிப்பதன் மூலம் எதிர்கால சூழ்நிலைக்குத் தயாராவதற்கு நாம் முன்பே யோசித்து எம்மை தயார்படுத்திக்கொள்வதும் ‘முன்னால் சிந்திப்பது’ ஆகும். முன்கூட்டியே திட்டமிடுவது என்பதும் இதுவேயாகும். மனிதர்கள் எதிர்கால நிகழ்வுகளை மனரீதியாக உருவகப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் எதிர்கால வெற்றி நம் வீட்டு வாசலில் ஒரே இரவில் வந்துவிடுவதில்லை
தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தாமல் பின்பற்றுவது ஒரு பெரிய பலவீனமாகும்
தவறான பின்பற்றல் ஒரு சிறுமி தன் தாய் இரவு உணவிற்கு மீன் தயார் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தாய் “மீனின் தலையையும் வாலையும்” வெட்டிய பின்னர் சமையல் பாத்திரத்தில் வைத்தாள். “ஏன் மீனின் தலையையும் வாலையும் வெட்டிநீர்கள்” என்று சிறுமி தன் தாயிடம் கேட்டாள். சிறிது நேரம் யோசித்துவிட்டு “நான் எப்போதும் அப்படித்தான் செய்கிறேன். என்னுடைய அம்மாவும் அப்படித்தான் செய்தாள்” என்றாள். தன் தாயின் பதிலில் திருப்தி அடையாத சிறுமி “மீனை சமைக்கமுன் ஏன் தலையையும்
மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்!
மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்! மற்றவர்களின் உணர்வை அறிவது ஒரு சமூகத்தின் வெற்றியின் ஆரம்பம் ஒரு சிறுவனுக்கு பூனை மீது பிரியம் இருந்தது. ஒரு பூனையைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆசையோடும் எதிர்பார்ப்போடும் இருந்தான். ஒரு பூனைக்குட்டியை வாங்குவதற்காகவென அவனுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் ஒரு முட்டியில் சேமித்து வந்தான். ஒரு நாள் சற்றுத்தொலைவிலுள்ள ஒரு வீட்டில் பூனைக்குட்டிகள் விற்கப்படுவதான செய்தி அவனுக்குக் கிடைத்தது. உடனடியாக முட்டியை உடைத்து அதிலிருந்த சில்லறைக்காசுகளை எடுத்து பூனை விற்கப்படும் இடத்திற்குச்
மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை
மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை “பிரார்த்தனை என்பது இதயத்தின் வேண்டுகோள், திருப்தியை நோக்கி பயணிக்க முடியமான எளிய பாதை” மனதைய இறைவனிடம் உயர்த்துவது, அவனிடமிருந்து நல்லவற்றை கோருவது.””தாழ்மையுடன் அவனிடம் மன்றாடுவது” இறைவனின் பல ஆசீர்வாதங்கள் மற்றும் கருணைக்காக நாம் அவனைத் துதித்து நன்றி செலுத்துவது எல்லாமே பிரார்த்தனையாகும், பிரார்த்தனை என்கின்ற இந்த வார்த்தை மரியாதை மற்றும் பக்தி மனப்பான்மையைக் கொண்டுள்ளது. இறைவனிடம் நாம் என்ன கேட்கலாம்? நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால் அவை எமக்கும் மற்றவர்களுக்கும் மிகவும்