“செல்லப்பிராணிகள் எமக்கு நண்பர்கள் அல்ல. அவை எமக்கு ஆறுதல் தரும் உணர்வுகள்”
சிகிச்சையாக செல்லப்பிராணிகள் குணமாக்கிகளாக செயற்படும் செல்லப்பிராணிகள் விலங்கு சிகிச்சை அல்லது செல்லப்பிராணி சிகிச்சை என்பது சில உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைகளைச் சமாளிக்க விலங்குகளின் பயன்பாட்டை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சையாகும். செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் போது கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனப்பாதிப்புகள் அதிகளவில் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இதய நோய், புற்றுநோய் மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற உள-உடல் நலப் பிரச்சினைகளை குணப்படுத்த துணையானதொரு சிகிச்சை நுற்பமாகவும் பயன்படுத்தப்படுகிறது. செல்லப்பிராணி சிகிச்சையால் கிடைக்கும்
மகிழ்ச்சியை எப்படி உணர்வது?
எம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் அழகாக இருக்கிறோம் என்று ஆச்சரியப்படுவோம் மகிழ்ச்சி என்பது மன அமைதி, மனஆறுதல், திருப்தி, சந்தோசம் போன்ற உணர்வுகளுடன் தொடர்பான நல் வாழ்வுநிலை என குறிப்பிடலாம். பொருளால், புகழால், பணத்தால், பலத்தால், சமூக அந்தஸ்தால் மனமகிழ்ச்சியை அடையாளம் என்று நினைப்பவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை. இவை எவற்றாலும் மனமகிழ்ச்சியை அடைய முடியாது என்று நம்புகின்றவர்களும் எம்மில் இருக்கின்றனர். ஆம்…! நாம் எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். மனஅமைதியை தேடுகிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள்,
மற்றவர் நிலை அறிந்து பேசுவோம்
மற்றவர் நிலை அறிந்து பேசுவோம் மரியாதை என்பது மற்றவர் யாராக இருந்தாலும் அவருடன் அழகாக நடந்துகொள்வதாகும் நகரம் ஒன்றில் கண்பார்வையற்ற ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் பார்வையற்றவராக இருந்தாலும் இரவில் வெளியே செல்லும் போதெல்லாம் ஒரு ஒளிரும் விளக்கை தன்னுடன் எடுத்துச் செல்வார். ஒரு நாள் கடையில் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தனது வீட்டைநோக்கி நடந்து வந்துகொண்டிருந்தபோது இளம் பயணிகள் சிலர் அவருக்கு குறிக்கிடுகின்றனர். அவர் குருடாக இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் ஒளிரும்
எதிர்மறை எண்ணங்களை வெல்வது எப்படி?
எதிர்மறை எண்ணங்களை வெல்வது எப்படி? எங்கள் மனதில் பூக்களையும் வளர்க்கலாம். களைகளையும் வளர்க்கலாம். எதிர்மறை எண்ணம் என்பது நாம் எம்மை பற்றியும் எம்மை சுற்றியுள்ளவை பற்றியும் பிழையாக, தவறாக அல்லது மோசமாக சிந்திக்கும் முறையை குறிக்கிறது. தொடர்ந்து நாம் எதிர்மறை எண்ணங்களை அனுபவிக்க ஆரம்பித்தால் அப்படியே அந்த அனுபவம் நீடித்தால் நாம் எம்மை பற்றியும் நாம் வாழும் உலகத்தை பற்றியும் நினைக்கும் விதத்தை தீவிரமாக பாதிக்கச் செய்துவிடும். நாம் நினைக்கும் விதத்தின் விளைவு ஒன்றோ நன்மை தரும்
எப்போது உள்ளம் தூய்மை மற்றும் அமைதியை அடையும்
“தூய்மையான உள்ளம்” தூய்மையான உள்ளம் அமைதியான உள்ளமாகும் உள்ளம் திறந்து செய்கின்ற வேலைகள் மட்டுமே முழுமை அடையும், வெற்றியும் பெறும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். தெளிவான, பலமான, பண்பான, நம்பகமான, ஊக்கமான, உயிரோட்டமான குணங்களை கொண்ட உள்ளம் அழகும் ஆரோக்கியமும் கொண்டு ஆன்மீகத்தால் அலங்காரமான உள்ளமாக இருக்கும். இது நல்ல உள்ளமாக செயற்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நல்ல உள்ளம் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்க்கப்பட வேண்டும். உண்பதில், உறங்குவதில், படிப்பதில், படிப்பிப்பதில், கொடுப்பதில்,
இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு
இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு இனிமையான சொற்களாகும் நாம் பிள்ளைகளோடும் ஏனையவர்களோடும் உரையாடும் போது நாம் எமது சொற்களை எப்படி வெளிபடுத்துகிறோம் என்பதை கட்டாயம் கவனித்துப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். • பிள்ளைகளும் மற்றவர்களும் மதிக்கப்படக்கூடிய விதத்தில் எமது சொற்களை வெளிப்படுத்துகிறோமா? • எமது குரலிலும் நாம் வெளிப்படுத்தும் சொற்களிலும் நாம் அவதானம் செலுத்துகிறோமா? • நாம் உரையாடும் பொழுது எமது முக பாவனையும் ஏனைய உடல் உறுப்புகளும் செயற்படும் விதத்தை தெரிந்துவைத்திருக்கிறோமா? • எமது சொற்கள் பிள்ளைகளையும் மற்றவர்களையும் எம்
அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது
மோசமான ஏச்சுப் பேச்சுக்கள் அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது கற்களும் கம்புகளும் எமது எலும்புகளை முறித்துவிடலாம். ஆனால் வார்த்தைகள் அப்படி எம்மை நோவிப்பதில்லை என்று சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும் அதன் வலி. சில வார்த்தைகள் மனதை உசுப்பி உறுத்தி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். ஒருவர் மனதில் தோன்றும் வலியின் அளவை, அதன் கனதியை மற்றொருவரால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது. நாம் வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும்
‘இல்லை ‘என்று சொல்வது ‘முடியாது’ என்று சொல்வது வார்த்தைகளால் மட்டும் நடப்பதில்லை.
தவறு ஒரு தோல்வி அல்ல நாம் தவறு செய்யும்போது அல்லது ஒரு பிழை விடும்போது சிலசமயம் நாம் நம்மீது கடினமாக நடந்துகொள்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் நாம் ஏன் நம்மிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும்? இது சரிதானா? முறைதானா? சிந்தித்துப் பார்ப்போம் எங்களால் ஏதேனும் தவறு நடந்தால்…. உடனடியாக எமது தவறை எப்படி திருத்துவது என்று சிந்திக்க நம் மனதிற்கு இடம் கொடுக்க வேண்டும் விடயங்கள் சரியாக நடக்காத நேரங்களில் நாம் எப்படி செயற்படுகிறோம் என்று நம்மை
நம்பிக்கையுடன் வாழ்வதே உற்சாகமாக இருப்பதற்குக் காரணம்
நம்பிக்கையுடன் இருப்போம் சிலர் மிகவும் கடினமான நேரங்களில் கூட உற்சாகமாக இருக்கின்றார்கள். ஆம்… அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்று நாம் கேட்கலாம் நம்பிக்கையுடன் வாழ்வதே அவர்கள் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம் ஆனால் நாம் கேட்க வேண்டிய சிறந்த கேள்வி… கடினமான நேரங்களில் “நான் எப்படி உற்சாகமாக இருப்பது❓ என்பது தான்” நம்பிக்கை என்பது …. எதிர்பார்ப்பு வெற்றி மற்றும் நேர்மறையான எதிர்காலம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு மனோபாவமாகும். “நம்பிக்கையாக இருப்பது என்பது…. எதிர்காலத்தைப் பற்றி
நம் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத வலிமை இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் கட்டங்களில் கடினமான காலங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் கடினங்கள், கஷ்டங்கள் குறுகிய காலத்திற்குள் வந்து சென்று விடும். சில நேரங்களில் அவை எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்திருப்பதை காண்கிறோம். அந்த தருணங்கள் நம்மை பின்னடையச்செய்வதாக அல்லது எம்மை உடைத்துவிடப்போவதாக நாம் உணரலாம். ஏதாவத பாதிப்புகள் நடக்கும் என்று பயப்படலாம். என்ன பயம் வந்தாலும் நாம் ஒருபோதும் பயத்திலோ அல்லது பதற்றத்திலோ வாழக்கூடாது. அன்பு சகோதர சகோதரிகளே..! நம் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத வலிமை
எல்லா நேரத்திலும் மனம் சரியாகத்தான் சிந்திக்கிறது என்று நாம் நம்பினால் அது பாரிய மனப்பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
மனநோய் எதிர்ப்பு சக்தி சவால்களை சங்கடங்களை அசாதாரண நிகழ்வுகளை சந்திக்கும்போத எமது உள்ளங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சில அசாதாரணமான மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். மனோரீதியாக நம்மில் பலருக்கு கவலை, மனஅழுத்தம், சோகம், சலிப்பு, தனிமை, விரக்தி போன்ற உணர்ச்சிகளை உருவாக்கியும் இருக்கலாம். இந்த மனநிலை மாற்றங்கள் தற்காலிகமானவை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த கடினமான உணர்வுகள் எம்மை கடந்து சென்றுவிடும். ‘மனிதன் கவலைப்படுவது, அச்சமடைவது என்பது ஆதி மனிதர்களிடமிருந்து தொடர்ந்து வருகின்ற மனஎழுச்சியாகும்’ என்று உளவியளார்கள்
அடைவேன்..! சாதிப்பேன்..!
நாம் பல இலக்குகளோடு வாழ்கிறோம் எதிர்பார்ப்புகளோடு நகர்கின்றோம் சாதனைகள் புரிய வேண்டும் என்று ஆசைப்படுளின்றோம் தைரியான மனோநிலையுடன் முன்செல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் அப்படி இருக்கும் போது சிலசமயம் பல தோல்விகளை சந்திக்க நேரிடுகின்றோம் பின்னடைவுகளுக்கு முகம் கொடுக்கின்றோம் தடங்கள்களை காண்கின்றோம் இதனால் கவலையும் சிலசமயம் வெறுப்பும் ஏற்பட்டு ஏமாந்து போய் முயற்சியை இடையில் நிறுத்தி விடுகிறோம். எல்லாம் முடிந்துவிட்டதே என்று நொந்து போகின்றோம். வாழ்கை பாதையில் முன்னோக்கி செல்லும்போது தோழ்விகள், பின்னடைவுகள், தடங்கள்கள், தவறுகள் என்பன
கவலையை சமாளித்து எப்படி? Postpone Worry
எண்ணங்கள் அல்லது நினைவுகள் மற்றும் உருவங்களின் எதிர்மறை பாதிப்பின் சங்கிலித்தொடராக வெளிவரும் ஒரு மனஉணர்வே கவலை என கருதப்படுகிறது. அது இறந்த காலத்தோடு அல்லது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இறந்த காலத்தில் நடந்த ஏதேனும் கசப்பான, காரமான நிகழ்வை ஒத்ததாக கவலை வெளிவரலாம். அல்லது எதிர்காலம் பற்றிய ஏதேனும் அச்சத்தின் வெளிப்பாடாக கவலை வெளிவரலாம். கவலை எந்த வடிவில் வந்தாலும் அதை எப்படிக் கட்டுப்படுத்தவது பற்றிய முக்கியமானதொரு நுட்பத்தினை இங்கு விவரிக்கிறோம். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்
உளவியல் சார்ந்த உடல் கோளாறுகள்
மனிதனின் உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையில் பிரிக்க முடியாத அளவு நெருக்கமான உறவு இருப்பது பற்றி நாம் அறிவோம். உள்ளம் ஏதாவது முறைகளால் பாதிப்புக்கு உள்ளானால் அதன் தாக்கத்தை உடலில் கண்டுகொள்ளலாம். அல்லது உடல் ஏதோவகையில் வருத்தப்படுவதை, தாக்கத்திற்கு உள்ளாவதை நாம் உணர்ந்திருக்கலாம். அதே போன்று உடல் ஏதாவது நோயால், விபத்துகளால் அல்லது காயங்களால் பாதிக்கப்பட்டால் அதன் காரணமாக உள்ளம் அசந்துபோய் கவலைப்படுவதை, தைரியம் குறைந்து போவதை நாம் அனுபவித்தும் இருக்கலாம். உள்ளத்திற்கு ஏற்படும் பாதிப்புகளால் வெளிவரும் அறிகுறிகளுக்கு