தியாகத்தின் உருவம்
ஒரு தாய் இன்னொரு பிள்ளைக்கு தாயாகிறாள் இறைவனின் அருற் பிரதிநிதியை சுமக்கும் பாக்கியத்தால் அலங்காரமாகிறாள் அதை அவளது இன்னொரு பிள்ளை காண்கிறது தாயின் தாய்பேற்று மாற்றங்களை கண்திறந்து பார்க்கிறது அது அவள் பரிசளித்த முதற்பிள்ளை சுறுசுறுப்பாய் கலகலப்பாய் இருந்த தாயின் உடல் இப்போது அசந்து போவதை பார்த்து பிள்ளை மனம் வெதும்பிப் போகிறது விரும்புவதை உண்ணவும் குடிக்கவும் முடியாமல் விரும்பியவாறு அமரவும் தூங்கவும் முடியாமல் விரும்புகிற இடம் போகமுடியாமல் தாயானவள் தன் உடலை – தன் உணர்வுகளை
மனிதம் வாழும் மனை
மனிதம் வாழும் மனை மனையை மனையாக மாற்றுவோம் மனிதர் வாழும் மாண்புமிகு மாளிகையாக மாற்றுவோம் முழக்கமும் மோதலும் இல்லாத நடிப்பும் நாடகமும் இல்லாத கலைமனையாக மாற்றுவோம் புன்னகை மறைக்கப்பட்ட புருவமாக கண்ணீரில் மூழ்கிய கண்களாக அல்லாமல் கல்பில் வளரும் காவியமாக மாற்றுவோம் வலிகளால் குத்தப்படும் வதைக்கூடமாக அல்லாமல் மலர்கள் சிரிக்கும் பள்ளிக்கூடமாக மாற்றுவோம் சுவர்களால் மறைக்கப்பட்ட இடமாக அல்லாமல் சுவனத்து மொட்டுக்கள் விளையாடும் மைதானமாக மாற்றுவோம் பொறாமையும் பேராசையும் குடியிருக்கும் கோட்டையாக அல்லாமல் அழகான கனவுகளுடன் பயணிக்கும்
மஜ்மாவின் மண்
இது வெறும் கல்லறைகளை சுமந்த பாழடைந்த மண் அல்ல கொத்துக் கொத்தாய் கொரோனா கொத்திச் சென்ற உடல்களுக்கு அரண்மனை கட்டிய கருணைமிக்க மண் 🌸 அன்று இது சொட்டு நீர் இல்லாத வறண்ட மண் இன்று இது சுவனத்து நீரூற்றை நினைவூட்டும் ஈரமான மண் 🌸 எரிக்கப்பட்ட ஆன்மாக்களின் ஏக்கங்களால் ஏற்றம் பெற்ற மண் கோடி பிரார்த்தனைகளால் கோபுரமான மண் 🌸 மாற்றுமத உடல்களுக்கும் அடைக்கலம் தரும் தாராள மண் பொறுமையின் போராட்டத்தால் புகழ்பெற்ற மண் 🌸
கனவுகளின் உச்சிக்கு..
கனவுகளின் உச்சிக்கு.. ஒரு ரோசா துண்டுக்கு கை கொடுக்கிறபொழுது அது பூத்துக்குலுங்கும் செடியாக மாறுகிறது இளந்தளிரே….. என் விரல்களை உண் விரல்களால் கோர்த்துக்கொள் நீ நடக்கும் ஒவ்வொரு சாலையிலும் நீ வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் உன்னுடன் நடப்பேன் உணக்கு சாயத் தேவைப்பட்டால் என் தோள்பட்டையில் சாய்ந்துகொள் நான் உன்னை கவனமாக கூட்டிச் செல்கிறேன் உண் கனவுகளை காணும்வரை
விசித்திர மனிதர்கள் – தனித்துவத்தை இழந்து தன்னிலை மறந்து வாழ்கிறார்கள்
தனித்துவத்தை இழந்து தன்னிலை மறந்து வாழ்கிறார்கள். உறவுகளின் உயிரோட்டத்தை மறக்கிறார்கள். கருவிகளின் பிடியில் கட்டப்பட்டு இருக்கிறார்கள். திசை தவறிய பறவைபோல் திக்கின்றி இருக்கிறார்கள். உயரிய இலக்கை அடைய உழைக்காதிருக்கிறார்கள். வெற்றிபெற்றவர்களை பார்த்து வெறித்தனமாக இருக்கிறார்கள். சருக்கி விழுந்தவர்களை பார்த்து சத்தமாக சிரிக்கிறார்கள். சிந்தனையை மறைத்து சீலை போட்டுக்கொள்கிறார்கள். மற்றவர் வார்த்தைகளை நம்பி மயங்கிப்போகிறார்கள். அடுத்தவர்கள் பற்றி அதிகமதிகம் அலவளாவுகிறார்கள். தம்மைப் பற்றி நினைக்க தவறிவிடுகிறார்கள். அவர்களே அவர்களை அளந்து சரியென்கிறார்கள். மற்றவர்களை வாய்கூசாமல் மட்டிட்டு பிழையென்கிறார்கள். வானைத்தொடுமளவு
மூடப்படாத களஞ்சியம் – வீட்டுக் களஞ்சியம் வெறுமையாகலாம். நாட்டுக் களஞ்சியம் நட்டமாகலாம்.
பஞ்சம் வருமோ என்று பயப்படாதே! பட்டினி தாக்குமோ என்று பதட்டப்படாதே! உணவில்லையென்று உன்னுடைய உறவுக்கு முன்கூட உருகிவிடாதே! வீட்டுக் களஞ்சியம் வெறுமையாகலாம். நாட்டுக் களஞ்சியம் நட்டமாகலாம். உனைப் படைத்தவனின் உணவுக் களஞ்சியம் ஒரு கணப்பொழுதேனும் ஓய்வதில்லை… அவன் அழகாய் அருளியதை, வீணாக்கி விரயமாக்காது அளவாய்ப் புசித்து, அதிகமாய்க் கொடுத்து, பசித்தோனுக்குப் பகிர்ந்து வாழ். மாபெரும் இறைவனிடத்தில் கேட்பவனாய் இரு. மனிதனுக்கு முன் கொடுப்பனாய் இரு.
மகப்பேறு – மனித வாழ்வினில் புனித காவியம்
(ஒரு கணவன் தன் வாரிசை சுமக்கும் மனைவிக்கு வழங்கும் வளமான வரிகள் இவை… மகிழ்ச்சியுடன் மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறோம் உங்களுடன் ….) மனித வாழ்வினில் புனித காவியம் நீ… சிறப்புக் கதாபாத்திரத்தில் பிறப்பெடுக்கும் கதாநாயகி நீ.. ஆண்மையினை சுமக்கும் பெண்மை நீ… சுகத்துடனே அகத்தினில் சிசுவை ஏற்பவள் நீ… பலவீனங்களை சுமந்து செலவீனங்களை தவிர்ப்பவள் நீ… தூக்கம் துறந்து ஏக்கங்கள் சுமப்பவள் நீ… விருப்பங்களை மறந்து வெறுப்புக்களை ஏற்பவள் நீ… குடல் பிரட்டும் குமட்டல்களை உடல் முழுதும்