மற்றவர் மகிழ்ச்சியில் நான்….?
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….? ▪மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா? ▪மற்றவருக்கு ஒரு நலவு நடக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்து தானும் அந்த சந்தர்ப்பத்தை அனுபவிக்கும் மனிதரை பார்த்ததுண்டா? ▪அல்லது மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில் ஏதோ விதத்தில் விருப்பம் காட்டும் மனிதரை கண்டதுண்டா? இப்படியான ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உணர்ச்சி முதிர்ச்சியடைந்த ஒரு சிறந்த மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் இதன் உண்மையாகும். வாழ்க்கையில் சற்று நேரத்திற்கு நாம் நம்முடைய
மனைவியை எப்படி மதிப்பது…!
அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது சிறுமைப்படுத்தப்பட்டாலோ எங்கள் திருமண துணை காயமடைகிறாள். மதிக்கப்படும்போது அவள் மணமேடை மனம் தருவதை நன்றாக உணர்கிறாள். தன்னை இழிவுபடுத்த முயற்சிப்பவர்களை வெறுக்கிறாள். இதுதான் மனித இயல்பு. மற்றவர்களை விட தன் கணவன் அவளை அதிகமாக மதிக்க வேண்டும் என்று மனைவி நிச்சயமாக எதிர்பார்க்கிறாள். தன் வாழ்க்கைத் துணை தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க அவளுக்கு எல்லா உரிமையும் உண்டு. நம் மனைவிக்கான மரியாதையை வெவ்வேறு வடிவங்களில் கொடுக்கலாம். அதை
மணவாழ்வில் மரியாதை
மணவாழ்வில் ஒருவரையொருவர் அவமரியாதை செய்வது அல்லது மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்வது நமது திருமண உறவை அழிக்கக்கூடிய மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எந்தவொரு உறவின் அடித்தளமும் மரியாதையுடன் தான் தொடங்குகிறது. நாம் நமது துணையிடம் அவமரியாதையாக இருந்தால், நம் மண வாழ்க்கை உறவை எதுவாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். ஒருவரையொருவர் மதிப்பதன் மூலம் வலுவான, அழகான, ஆரோக்கியமான மணஉறவு கட்டமைக்கப்பட்டுகிறது. திருமணத்தின் வெற்றிக்கு மரியாதை மிகவும் முக்கியமானது, இது அன்பை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறது.
வெற்றிகரமான திருமணத்திற்கான பாதை
உண்மையான அன்பும் ஒன்றுசேர்ந்து செயலாற்றுவதும் அமைதியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு கவனமாக முன்தயாரிப்புகளைச் செய்கிறோம். முதலில் நிலத்தை வாங்குகிறோம். திட்டப்படங்களை வரைகிறோம். நல்ல பொருட்களை தேடி வாங்குகிறோம். அத்திவாரம் இடுகிறோம். இப்படி அறிவையும் முயற்சியையும் பணத்தையும் பயன்படுத்தி வீட்டைக்கட்டி முடிக்கிறோம். ஒரு வீட்டை கட்டும் விடயத்தில் இந்த விதிகளை நாம் பின்பற்றுகிறோம் என்றால் ஒரு வெற்றிகரமான திருமணத்தை கட்டியெழுப்பும் விடயத்திலும் நாம் இதைவிட அழகான விதிகளை பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம். • ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு
கணவன்- மனைவி அறிமுகமாதல்
கணவன்- மனைவி அறிமுகமாதல் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அறிமுகமாதல் என்பது ஒரு நண்பர் மற்றொரு நண்பருக்கு அறிமுகமாதல் போன்றதல்ல. ஒரு ஆசிரியர் ஓர் மாணவருக்கு அறிமுகமாதல் போன்றதுமல்ல. ஒரு மனிதர் இன்னொரு மனதிருக்கு அறிமுகமாதல் போன்றதுமல்ல. இந்த ஒவ்வொரு அறிமுகமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தொடர்வது போன்று முடிந்துவிடவும் செய்யலாம். ஒரு தடவை அறிமுகமாகி அத்தோடு நிறைவு பெறவும் செய்யலாம். இவ்வாறான அறிமுகங்களுக்கு பெரும்பாலும் ஒரு எல்லையும் ஒரு முடிவும் இருக்கலாம். ஆனால் மணவாழ்க்கையில் ஒருவர்
உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்
மனிதர்கள் வாழும் இடம் “உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” பிள்ளைகள் வளர்ப்பதில் வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது என்பதை நாம் எவரும் மறுக்கமாட்டோம். பிள்ளை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள திறவுகோலாக அமையலாம். அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக முக்கிய காரணமாக அமையலாம். பிள்ளைகள் வாழ்வை ஆரம்பிக்கும் முதலாவது இடமான ‘வீடு’ வரவேற்பு, அன்பு, அரவணைப்பு,
மன ஆறுதலும் அன்பும் தரும் இடம் கட்டிடம் கற்களால் ஆனது.
மன ஆறுதலும் அன்பும் தரும் இடம் கட்டிடம் கற்களால்ஆனது. வீடு நம்பிக்கைகளாலும் கனவுகளாலும் ஆனது. “வீடு போன்ற இடம் எங்கும் இல்லை” “வீடுபோல் வராது” “வீட்டைப்போல் சுகமான இடம் வேறெங்கும் இல்லை” இப்படி வீடு பற்றிய அழகான சொற்பிரயோகங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். நாமும் சொல்கிறோம். வீடு என்றால் என்ன என்பதற்கும் பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அப்படியானால் வீடு என்றால் என்ன? ஒருவன் தனது குடும்பத்தோடு வாழும் இடம்தான் வீடு’ ஒருவன் பிறந்தது முதல் தொடர்ந்து தனது
பெற்றோரின் முரண்பாடுகள்
“பிள்ளைகளுக்கு முன்பான எம்முடைய தொடரான முரண்பாடுகள் தலைமுறை தலைமுறையாக நீண்டுசெல்லலாம்” கணவன் மனைவி அல்லது தாய் தந்தை உறவின் போது முரண்பாடுகள் இயல்பாகவே நிகழக்கூடியவை ஆகும். முரண்பாடுகள் நிகழ்ந்து ஒருவர் மற்றவரோடு உடன்படாது இருக்கும் சந்தர்ப்பங்களையும் அவ்வாறே உரையாடி ஒன்றுபட்டு செயற்படும் சந்தர்ப்பங்களையும் பிள்ளைகள் பார்த்துப் பாடம் பெற்றுக் கொள்கின்றனர். முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றின் போது அவசரப்பட்டு ஆவேசப்பட்டு முரண்பாட்டை வன்முறையாக, வார்த்தை மோதலாக வெளிப்படுத்துவதுதான் அசாதாரணமானது. பெற்றோரின் உரையாடல்களை, அவர்கள் செயற்படும்
காதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி?
காதல் நிறைந்த திருமணம் “சூரிய ஒளி இல்லாமல் ஒரு பூ மலர முடியாது போல ஒருவருக்கொருவர் அர்ப்பணிக்காமல் காதல் வளர முடியாது.” எவரை நேசிக்கிரோமோ அவர் மீதான காதல் அதுவும் உண்மையான காதல் சட்டென்று நடப்பதில்லை. தற்செயலாக தோன்றுவதுமில்லை. நேசிப்பவரை.. • உண்மையாகவே அறிந்து கொள்வது • அவரை போற்றுவது • ஆழமாக மதிப்பது • அவரை ஒத்துக்கொள்வது • அவருக்காக எதையும் கொடுக்க விரும்புவது • அவருடன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது • எதிலும்