மனிதனின் அழகு
மனித குணத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்தால், மனிதனின் உண்மையான அழகு அவனது உடல் தோற்றத்தில் இல்லை, ஆனால் அது அவனது உள்ளத்தில் இருப்பதைக் காணலாம். அவனது ஆன்மாவில் இருந்து வெளிப்படுவதை புரியலாம். தோற்றம் அவனை மனிதன் என்று அடையாளப்படுத்துகிறது. அவனது அழகான குணங்கள் அவனை உயர்ந்த படைப்பாக எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மை, பொறுமை, பொறுப்பு, உண்மைத்தன்மை, விடாமுயற்சி, விசுவாசம், பணிவு, பாசம் போன்ற குணங்கள் மூலம் அழகு உள்ளிருந்து வெளிவருகிறது. மனிதன் ஆரோக்கியமாகவும் அழகாகவும்
எங்கள் மீதான அன்பு
எங்கள் மீதான அன்பு நம்மில் சிலர் அன்புக்காக ஏங்குகிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு உறவுகள் இல்லை என்று கவலைப்படுகிறார்கள். மற்றவர்களின் அன்பும் உறவும் இல்லாமல் வாழவே முடியாது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இவை எல்லாம் என்றைக்கோ ஒரு நாள் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்மில் பலர் புரிந்து கொள்ளவில்லை. அன்பும் உறவும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, அவை எங்கள் முழு வாழ்க்கையும் அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அன்பும் உறவும்
எம்மை நகர்த்துவோம்…
எம்மை நகர்த்துவோம் ஆம்..! எம்மை முன்னோக்கி நகர்த்துவது எப்படி? அல்லது இலக்கை அடைவது எப்படி? அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. பேசுவதை விட எங்கள் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த விடயம். ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம் தான் இது. படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும், இந்த விடயம் பலருக்கும் பலனாகவே இருந்து வருகிறது. “குறைவாக பேசு, அதிகமாக வேலை செய்” என்று சொல்வதை நாம்
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….?
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….? ▪️மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா? ▪️மற்றவருக்கு ஒரு நலவு நடக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்து தானும் அந்த சந்தர்ப்பத்தை அனுபவிக்கும் மனிதரை பார்த்ததுண்டா? ▪️அல்லது மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில் ஏதோ விதத்தில் விருப்பம் காட்டும் மனிதரை கண்டதுண்டா? இப்படியான ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உணர்ச்சி முதிர்ச்சியடைந்த ஒரு சிறந்த மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் இதன் உண்மையாகும். வாழ்க்கையில் சற்று நேரத்திற்கு நாம் நம்முடைய
பதறிய காரியம் சிதறிப் போகும்
அவசரம் என்பது ஒரு விடயத்தை விரைவாகவும், வேகமாகவும், சில சமயங்களில் கவனக்குறைவாகவும் செய்வதை குறிக்கும். அவசரம் என்பது ஒரு விசுவாசியின் குணம் அல்ல. சிந்தித்து நிதானமாகவும் அழகாகவும் ஒன்றை செய்வது தான் ஒரு உறுதியான விசுவாசியின் குணமாக இருக்க வேண்டும். அமைதி என்பது அல்லாஹ்விடமிருந்தும், அவசரம் ஷைத்தானிடமிருந்தும் வருகிறது என்று நாம் படித்து இருக்கிறோம். அவசரம் ஷைத்தானிடம் இருந்து வருகிறது என்றால்… அது மிகப் பெரிய தோல்விக்கு வழிவகுக்கும். மன வருத்தத்தைத் தரும். முன்செல்வதற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக
தூக்கத்தை முழிக்க வைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்
ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எமக்கு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் அது எங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாம் பயன்படுத்தவதென்றால் அது தொழில்நுட்பத்தின் பிழை அல்ல. அதை பயன்படுத்தும் முறையில் நாங்கள் விடும் பிழை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்ஃபோன்கள் நம் வாழ்க்கையை எளிதாகி, அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக ஆக்க உதவியாக இருப்பதுடன் எமக்கு இலகுவாக தகவல்களை வழங்கவும் எம்மை ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்த நவீன யுகத்தில்
நாம் எவர் முன் எதை பேசினாலும் பேசும் விடயத்தை பற்றி இருமுறை யோசிப்போம்.
கத்துவது அசிங்கமாகும் நாம் எவர் முன் எதை பேசினாலும் பேசும் விடயத்தை பற்றி இருமுறை யோசிப்போம். ஏதேனும் பிரச்சினைகள் மனக்கசப்புகள் ஏற்படும் போது நம்மில் சிலர் இடம் பார்க்காமல், முன்னே இருப்பவர்கள் எவர் என்றும் பார்க்காமல் அசிங்கமாக, ஆவேசமாக கத்துவதை, எடுத்தெறிந்து விழுவதை பார்க்கிறோம். மக்கள் முன்னிலையில் கத்திப்பேசுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை அல்ல. ஆண்களாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இப்படி நடந்துகொள்வது அசிங்கமானது. எந்தவொரு கடினமான சூழ்நிலையை சமாளிப்பதற்கும் கத்துவது ஒரு ஆக்கபூர்வமான வழி அல்ல. இருப்பினும்
எப்படி என்னை ஊக்கப்படுத்துவது
எங்களை ஊக்கப்படுத்துவது என்பது எங்கள் பலவீனங்கள் மற்றும் இயலாமைக்கு பதிலாக எங்கள் பலம், நேர்மறையான பண்புக்கூறுகள் மற்றும் திறன்களில் கவனம் செலுத்துவதாகும். நாம் நம்மை ஊக்கப்படுத்துவதன் மூலம் இவற்றை வெளிக் கொண்டு வரலாம். எப்படி எம்மை ஊக்குவிப்பது…… சில அழகான உறுதியான ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மூலம் எம்மை ஊக்கப்படுத்தலாம். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.. என்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் என்ன நடக்கிறது என்பதற்கு பதிலளிக்க வேண்டிய விதத்தை என்னால் கற்றுக்
எங்களை மேம்படுத்துவதற்கான ஒரே ரகசியம்.
“குறைவாக பேசு அதிகமாக வேலை செய்” பேசுவதை விட எங்களின் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த ரகசியம். ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ரகசியம் இது. படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும், இந்த ரகசியம் பலருக்குப் பலனாகவே இருந்து வருகிறது. “குறைவாக பேசு அதிகமாக வேலை செய்” என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இதன் முதல் படி, எங்கள் நேரம் மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொள்வது… இரண்டாம் படி, பேசுவதை
நதிபோல் வாழ்வோம்
வெற்றியை நோக்கி செல்வதற்குறிய பசிதான் எங்களை இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரம் வெற்றியை நோக்கி செல்லும் மனிதர்கள் அனைவரும் வெற்றிக்காக ஏங்குகிறவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள்… அழகான, ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை அடைவதற்கான பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலிருந்தும் அதிகமானவற்றைப் பெற ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்! வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்கள் போதுமான தூரம் வரை பயணிப்பார்கள். அவர்களைச் சுற்றியுள்ளவர்களை விட அதிகமான தூரம் போவார்கள். நதிபோல நகர்வார்கள். மேடு பள்ளங்களை தான்டுவார்கள்.
போராளியின் சிறந்த நண்பன்
நாம் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களுக்கு முகம் கொடுக்கவும் சில விடயங்களை செய்யவும் பயப்படுகிறோம். பயம் என்பது நாங்கள் உண்மையிலேயே விரும்புவதை நோக்கிச் செயல்படுவதை தடுக்கும் காரணியாகும். பயம் எம்மை திசை திருப்பிவிடும் பலத்தை கொண்டது. அதேநேரம் சாக்குப் போக்குகளுக்கு வழிவகுக்கவும் செய்கிறது. ஆனால் பயம் ஒரு சாதாரண எதிர்வினை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ‘பயம் ஒரு போராளியின் சிறந்த நண்பன்’ என சொல்லப்படுகிறது. அதனால் பயம் என்பது வெட்கப்படக்கூடயதொன்றல்ல. பயம் எங்களை கூர்மையாக
நாம் நமக்காக அதிக முதலீடு செய்வோம்
நாம் நமக்காக அதிக முதலீடு செய்வோம் நாம் நமக்காக முதலீடு செய்வதுதான் நமது தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரிக்க துணையாக இருக்கும் இதை சுயநலம் என்று பலர் நினைக்கலாம். அது சுயநலம் அல்ல அது தனிப்பட்ட முதலீடு. நாம் நமக்காக எதை எப்படி முதலீடு செய்ய வேண்டும்? நாங்கள்தான் எங்களுக்கான சிறந்த சொத்து என்பதை நினைவில் வைத்து கொள்வோம். ஒரு நல்ல பெயருக்கு தகுதியான ஒரு பிராண்டாக நம்மை நாம் பார்க்க வேண்டும் மக்கள் தங்கம் மற்றும் இரத்தினத்தை
சுயமரியாதை மற்றும் எம்முடைய தனித்துவமான திறன்கள் மீதான நம்பிக்கை
பறவையும் கிளையும் (நாம் இதை கவனமாக வாசித்து வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம்) ஒரு சோர்வடைந்த பறவை ஒரு கிளையில் இறங்கியது. அது அமைதியாக ஓய்வெடுத்தது. கிளையிலிருந்து காட்சிகளை பார்த்து ரசித்தது அது ஆபத்தான விலங்குகளிடமிருந்து பாதுகாப்பையும் உறுதி செய்தது. சற்று நேரத்தில் பறவை கிளைக்கு பழகியதும் கிளை வழங்கும் ஆதரவும் பாதுகாப்பும் உறுதியானது சிறிது நேரம் கழித்து ஒரு பலத்த காற்று வீசத் தொடங்கியது மரம் பாதியிலேயே முறிந்துவிடும் என்று தோன்றும் அளவுக்குத் வேகமாக ஆடியது. ஆனால்
எம்மை மதிப்பதும் பாராட்டுவதும்… ஏன் முக்கியம்?
எம்மை மதிப்பதும் பாராட்டுவதும் ….. ஏன் முக்கியம்? நம்மில் பெரும்பாலோர் நாம் நல்லவர்களா இல்லையா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும் என்று நினைக்கிறார்கள் அதாவது எங்கள் மதிப்பையும் திருப்தியையும் மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறோம். அது கிடைக்கும்வரை காத்தி ருக்கிறோம். பாராட்டை மதிப்பை மற்றவர்கள் தரும்வரை காத்திருக்கிறோம். நாங்கள் செய்ததை யாரும் பாராட்டவில்லை என்றால் என்ன செய்வது? மற்றவர்களின் பாராட்டை ஒப்புதலைக் கேட்பதற்குப் பதிலாக நாம எமக்குள்ளே இருந்து சுயமாகவே ஒப்புதல் கொடுத்தக்கொள்வதும் திருப்த்திப்பட்டுக்கொள்வதும் சுயமரியாதை ஆகும். இது ஒரு
வாழ்வின் மேன்மை நாம் விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது
விழுவோம்..! எழுவோம்..! வாழ்வின் மேன்மை நாம் விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் ஏதாவது சந்தர்ப்பத்தால் தோல்வியடைகிறோம். ஆனால் எமது கணவுகளின் பின்னால், எதிர்பார்ப்புகளின் பின்னால் தைரியமாக முன்னோக்கிச் செல்வதை ஒரு போதும் நிறுத்திவிடக்கூடாது. நாம் தோல்வியைக் கண்டால் அவற்றை எதிர்கொண்டு கற்கவேண்டியதை கற்று தைரியமாக முன்செல்ல வேண்டும். “ரொபர்ட் புரூஸ் என்கின்ற ஸ்கொட்லாந்து நாட்டைச்சேர்ந்த மன்னன் தனது யுத்தத்தில் தோல்வியடைந்தான். அவன் கடுமையாக மன அழுத்தத்திற்கு உட்பட்டு சோர்வடைந்திருந்தால்