தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பவரின் இதயத்தில் எந்த எல்லையும் தடையும் இருப்பதில்லை.
எம்மை பாதுகாத்து – மற்றவர்களை பாதுகாப்போம் தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பவரின் இதயத்தில் எந்த எல்லையும் தடையும் இருப்பதில்லை. மீண்டும் ஒரு சவாலான சந்தர்ப்பத்தை நாம் சந்தித்திருக்கிறோம். நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் ஒரு புதிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த அபாயகரமான சந்தர்ப்பத்திலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் கமூகத்தையும் பாதுகாப்பது இப்போது எமக்குள்ள மிகப்பெரிய சவாலாகும். நாங்கள் சமூகமாக இருப்பதால் மற்றவர்களுடனான எமது தொடர்புகளை மிகவும் கவனமாக பேணுவதுடன் எமது சமூகத்தின் நல்ல ஆரோக்கியம் வளரவும்
விழிப்புடன் இருப்பது எப்படி வெளிப்படுத்துவது
நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் மிகவும் கவனமாக அவதானமாக இருப்பது விழிப்புடன் இருத்தல் எனலாம். தற்போதைய தருணத்தின் மீது கவனம் செலுத்துதல் விழிப்புடன் இருத்தலாகும். நாம் இப்போது என்ன செய்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்திருப்பதும் விழிப்புடன் இருத்தல் ஆகும். தன்மீதும் தன்செயல் மீதும் கவனத்துடன் இருப்பது என்பதும் விழிப்புடன் இருப்பதையே குறிக்கும். எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தேடித்தெரிந்து கொள்வது இதன் பொருளல்ல. எமது பொறுப்புகள், எமது
யார் அழகானவர்? நீங்கள் அழகானவரே
யார் அழகானவர்? நான் அழகானவரா….? அழகானவர் எப்போதும் தனக்கு உண்மையானவராக இருப்பார் கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டவர்களும் கட்டான உடலை கொண்டவர்களும் நாகரீகமாக வாழ்கின்றவர்களும் தான் அழகானவர்கள் என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல இதயத்தின் அழகும் நடத்தையின் அழகும் ஒருங்கிணைந்து வெளிப்படுவதே மனினுக்கு அழகாகும். அதுவே மனிதனின் அழகாகும் உடலை மட்டும் அழகுபடுத்துவது குற்றம் சொல்லக்கூடிய அழகாகலாம் இதயத்தையும் நடத்தையையும் அழகுபடத்துவது பாராட்டப்படக்கூடிய அழகாகலாம் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்தும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கொஞ்சம்
மரியாதை; வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம்
மதிப்பும் மரியாதையும் வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம் நாம் ஒவ்வொருவருடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வதை எதிர்பார்க்கின்றோம். மதிப்பும் மரியாதையும் உறவை வளர்ப்பதிலும் வலுப்படுத்துவதிலும் மிகப்பெரும் தாக்கம் செலுத்தும் விடயங்களாகும். மரியாதையின் உயரிய பண்புகளை வெளிப்படுத்திய நபிகளாரின் அற்புத வாழ்வியல் கலையை நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் ரழி கூறும் விதம் எமக்கு அழகாக உளவியல் பாடம் கற்பிக்கிறது. “நான் நபிகளாருக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்தேன். அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தேன். ஒரு முறைகூட அவர் என்னை
வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம்
வளமான வார்த்தைகள் ———————– வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம் சுய கவனிப்பு அல்லது எம்மை நாம் கவனித்துக்கொள்வது பற்றி சிந்திக்கும் போது நாம் பேசும் வார்த்தைகளை கருத்தில் கொள்ளவது மிக மிக முக்கியமாகும். நாம் நினைக்கின்றோம். நினைத்துவிட்டு பேசுகின்றோம். நாம் நினைக்கின்றவை பெரும்பாலும் எமது வாயிலிருந்து வெளியே பாய்ந்து மற்றொருவரின் காதுகளில் இலேசாக புகுந்துகொள்கின்றன. அப்படி புகுந்துவிட்ட வார்த்தைகளை எம்மால் ஒருபோதும் வெளியே எடுத்துவிட முடியாது. நாம் எம்மை பற்றி உணர்கின்ற விதத்திலும் மற்றவர்கள்
மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன
நாம் விசேடமானவர்கள் We Are Special மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன நான் விசேடமானவர் என்ற உணர்வு உங்களுக்கு எப்பொழுதாவது வந்ததுண்டா? வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் அந்த உணர்வு எங்கிருந்து வந்திருக்கும்? அதன் அர்த்தம் எதுவாக இருக்கும்? என்று நாம் தேடிப்பார்ப்போம். நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் விசேடமானவர்கள். மனிதர்களாகப் பிறந்திருப்பதே நாம் விசேடமானவர்கள் எனபதற்கான மிகச் சிறந்த ஆதாரமாகும். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் ஒப்புவமை அற்றவர்கள் ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர் ஒவ்வொருவரும்