மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்!
மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்! மற்றவர்களின் உணர்வை அறிவது ஒரு சமூகத்தின் வெற்றியின் ஆரம்பம் ஒரு சிறுவனுக்கு பூனை மீது பிரியம் இருந்தது. ஒரு பூனையைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆசையோடும் எதிர்பார்ப்போடும் இருந்தான். ஒரு பூனைக்குட்டியை வாங்குவதற்காகவென அவனுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் ஒரு முட்டியில் சேமித்து வந்தான். ஒரு நாள் சற்றுத்தொலைவிலுள்ள ஒரு வீட்டில் பூனைக்குட்டிகள் விற்கப்படுவதான செய்தி அவனுக்குக் கிடைத்தது. உடனடியாக முட்டியை உடைத்து அதிலிருந்த சில்லறைக்காசுகளை எடுத்து பூனை விற்கப்படும் இடத்திற்குச்