பிள்ளைகளுக்கு கோவத்தில் கத்துவது
சில நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைளுக்கு கோவத்தில் கத்துகிறோம். சத்தமிட்டுப் பேசுகிறோம். அதட்டுகிறோம். கத்திப்பேசி முகம் சுளித்து பிள்ளைகளுடன் நடந்தகொள்வது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
பிள்ளைகள் மீது குறிப்பாக சிறுபிள்ளைகள்மீது கத்துவதனால் ஏற்படும் உளவியல் விளைவுகள் சாதாரணமானவையல்ல.
இது தொடர்பாக டாக்டர் மார்கம் கூறுகையில் “பிள்ளைகளைக் கத்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மூளையை அழிக்கவில்லை என்றாலும் அவர்கள் பிள்ளைகளை மாற்றுகிறார்கள்” என குறிப்பிடுகிறார்.
“அமைதியான அனுபவத்தின் போது மூளையின் நரம்பியக்க கடத்திகள் பாதுகாப்பாக இருப்பது பற்றிய தகவலை ஆறுதலூட்டும் உயிர்வேதியியலை அனுப்புவதன் மூலம் உணரச்செய்கின்றன. இது ஒரு பிள்ளை அமைதியாக இருக்க நரம்பியல் பாதைகளை உருவாக்குகிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை கத்துவது பிள்ளையின் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் மற்றும் அதன் செயற்பாட்டிற்கு எதிர்மாறான விளைவுகளை எற்படுத்துகிறது.
ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் என்பது மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் ஒரு பகுதியாகும். இது திட்டமிடல் உட்பட பல்வேறு சிக்கலான நடத்தைகளின் செயற்பாடுகளுக்கும் பிள்ளையின் ஆளுமை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது
பிள்ளைகளுக்கு கத்தும்போது அவர்களின் உடல் அவர்களின் பயத்தை ஆபத்து என்று விளங்கவைப்பதுடன் அது போல் செயல்படவும் செய்கிறது.
இந்த நேரத்தில் பிள்ளை எதிர்மறையான உயிர்வேதியியல் பொருட்களை வெளியிடுகிறது. அப்போது பிள்ளை பெற்றாரை அல்லது கத்துபவரை தாக்கலாம். கத்தலாம்இ தப்பி ஓடலாம். அல்லது பயந்து உறைந்துபோன நிலைக்கு ஆகிவிடலாம். இவை எதுவும் பிள்ளையின் மூளை உருவாக்கத்திற்கு அல்லது அதன் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று டாக்டர் மார்கம் கூறுகிறார்
பெற்றோரின் அலட்டலுக்கும் ஏச்சுக்கும் பிள்ளைகள் மீண்டும் மீண்டும் முகம்கொடுக்கும்போத அது அவர்களின் நடத்தையில் வேரூன்றி அவர்கள் மற்றவர்களுடன் அதேமுறையில் நடந்தகொள்ளவும் முயற்சிக்க வைக்கின்றது.
நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் பிள்ளைகளை – குழந்தைகளை கத்துகிறோம் என்றால் அது ஆரோக்கியமான தகவல்தொடர்பு திறன்களை வளர்க்கவும் எங்களுடன் தொடர்புகொள்ளவும் முடியாமல் சங்கடப்பட வேண்டியேற்படும்.
பிள்ளைகளுக்கு கத்துவது
• மூளை விருத்தியடையும் விதத்தில் மாற்றங்களை கொண்டுவரலாம்
• வளர்ச்சியில் மோசமான பின்னடைவுகளை ஏற்படுத்தலாம்
• மனஅழுத்தத்தை அனுபவிக்க வழிவகுக்கலாம்
• உடலாரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
• உறவில் இடைவெளிகளை ஏற்படுத்தலாம்
அழகான மனிதன் எங்கள் வீட்டில் உருவாக வேண்டுமானால் அழகான வார்த்தைகளும் வளமான வாழ்க்கையும் எங்களிடம் இருக்கவேண்டும்.