தியாகத்தின் உருவம்
ஒரு தாய் இன்னொரு பிள்ளைக்கு தாயாகிறாள் இறைவனின் அருற் பிரதிநிதியை சுமக்கும் பாக்கியத்தால் அலங்காரமாகிறாள் அதை அவளது இன்னொரு பிள்ளை காண்கிறது தாயின் தாய்பேற்று மாற்றங்களை கண்திறந்து பார்க்கிறது அது அவள் பரிசளித்த முதற்பிள்ளை சுறுசுறுப்பாய் கலகலப்பாய் இருந்த தாயின் உடல் இப்போது அசந்து போவதை பார்த்து பிள்ளை மனம் வெதும்பிப் போகிறது விரும்புவதை உண்ணவும் குடிக்கவும் முடியாமல் விரும்பியவாறு அமரவும் தூங்கவும் முடியாமல் விரும்புகிற இடம் போகமுடியாமல் தாயானவள் தன் உடலை – தன் உணர்வுகளை