ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வேகத்தில் வளர்கிறது ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனித்துவத்தில் வளர்கிறது
ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வேகத்தில் வளர்கிறது ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனித்துவத்தில் வளர்கிறது தோட்டத்திலுள்ள மரங்களை சற்று நோக்குவோம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு அளவில் வளர்ந்து இருப்பதையும் ஒவ்வொரு அளவிலான காய்களைத் தருவதையும் காண்கிறோம். சில மரங்களில் கிளைகள் முறிந்து விழும் அளவிற்கு காய்கள் நிரம்பியிருக்கின்றன. சில மரங்களில் ஒரு சில கிளைகளில் மட்டும் காய்கள் தெரிகின்றன. ஒரு காயேனும் இல்லாமல் மொட்டையாக சில மரங்கள் நிற்கின்றன. பலா மரத்தில் பெரிய காய்களும்