மகப்பேறு – மனித வாழ்வினில் புனித காவியம்
(ஒரு கணவன் தன் வாரிசை சுமக்கும் மனைவிக்கு வழங்கும் வளமான வரிகள் இவை… மகிழ்ச்சியுடன் மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறோம் உங்களுடன் ….) மனித வாழ்வினில் புனித காவியம் நீ… சிறப்புக் கதாபாத்திரத்தில் பிறப்பெடுக்கும் கதாநாயகி நீ.. ஆண்மையினை சுமக்கும் பெண்மை நீ… சுகத்துடனே அகத்தினில் சிசுவை ஏற்பவள் நீ… பலவீனங்களை சுமந்து செலவீனங்களை தவிர்ப்பவள் நீ… தூக்கம் துறந்து ஏக்கங்கள் சுமப்பவள் நீ… விருப்பங்களை மறந்து வெறுப்புக்களை ஏற்பவள் நீ… குடல் பிரட்டும் குமட்டல்களை உடல் முழுதும்