மஜ்மாவின் மண்
இது வெறும் கல்லறைகளை சுமந்த பாழடைந்த மண் அல்ல கொத்துக் கொத்தாய் கொரோனா கொத்திச் சென்ற உடல்களுக்கு அரண்மனை கட்டிய கருணைமிக்க மண் 🌸 அன்று இது சொட்டு நீர் இல்லாத வறண்ட மண் இன்று இது சுவனத்து நீரூற்றை நினைவூட்டும் ஈரமான மண் 🌸 எரிக்கப்பட்ட ஆன்மாக்களின் ஏக்கங்களால் ஏற்றம் பெற்ற மண் கோடி பிரார்த்தனைகளால் கோபுரமான மண் 🌸 மாற்றுமத உடல்களுக்கும் அடைக்கலம் தரும் தாராள மண் பொறுமையின் போராட்டத்தால் புகழ்பெற்ற மண் 🌸