வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம்
வளமான வார்த்தைகள் ———————– வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம் சுய கவனிப்பு அல்லது எம்மை நாம் கவனித்துக்கொள்வது பற்றி சிந்திக்கும் போது நாம் பேசும் வார்த்தைகளை கருத்தில் கொள்ளவது மிக மிக முக்கியமாகும். நாம் நினைக்கின்றோம். நினைத்துவிட்டு பேசுகின்றோம். நாம் நினைக்கின்றவை பெரும்பாலும் எமது வாயிலிருந்து வெளியே பாய்ந்து மற்றொருவரின் காதுகளில் இலேசாக புகுந்துகொள்கின்றன. அப்படி புகுந்துவிட்ட வார்த்தைகளை எம்மால் ஒருபோதும் வெளியே எடுத்துவிட முடியாது. நாம் எம்மை பற்றி உணர்கின்ற விதத்திலும் மற்றவர்கள்