வாழ்க்கையை அளவிடுதல்
நாம் சிலசமயம் மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து எமது வாழ்க்கையை அளவிட்டுப்பார்க்கிறோம். அவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள்….. அவர்களுக்கு எதுதான் இல்லை…..நாம் எப்படி வாழ்கிறோம்……அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்…. இப்படி பல கோணங்களில் எமது வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையுடன் அளவீடு செய்கிறோம். இப்படி எமது வீட்டை, பொருளை, உடலமைப்பை, அறிவாற்றலை என பலவற்றை அளவீடு செய்கிறோம். அதிகப்படியான அளவீடு மனமகிழ்ச்சியை குறைத்து சுயமரியாதையை இல்லாமல் ஆக்கிவிடும். எங்களை விரக்தியில் ஆழ்த்திவிடும். மற்றவர்கள் முன் கோபப்பட வைத்துவிடும். அளவீடுகள் தொடர்ந்தால் பொறாமை