பெற்றோரின் முரண்பாடுகள்
“பிள்ளைகளுக்கு முன்பான எம்முடைய தொடரான முரண்பாடுகள் தலைமுறை தலைமுறையாக நீண்டுசெல்லலாம்” கணவன் மனைவி அல்லது தாய் தந்தை உறவின் போது முரண்பாடுகள் இயல்பாகவே நிகழக்கூடியவை ஆகும். முரண்பாடுகள் நிகழ்ந்து ஒருவர் மற்றவரோடு உடன்படாது இருக்கும் சந்தர்ப்பங்களையும் அவ்வாறே உரையாடி ஒன்றுபட்டு செயற்படும் சந்தர்ப்பங்களையும் பிள்ளைகள் பார்த்துப் பாடம் பெற்றுக் கொள்கின்றனர். முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றின் போது அவசரப்பட்டு ஆவேசப்பட்டு முரண்பாட்டை வன்முறையாக, வார்த்தை மோதலாக வெளிப்படுத்துவதுதான் அசாதாரணமானது. பெற்றோரின் உரையாடல்களை, அவர்கள் செயற்படும்