அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது
மோசமான ஏச்சுப் பேச்சுக்கள் அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது கற்களும் கம்புகளும் எமது எலும்புகளை முறித்துவிடலாம். ஆனால் வார்த்தைகள் அப்படி எம்மை நோவிப்பதில்லை என்று சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும் அதன் வலி. சில வார்த்தைகள் மனதை உசுப்பி உறுத்தி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். ஒருவர் மனதில் தோன்றும் வலியின் அளவை, அதன் கனதியை மற்றொருவரால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது. நாம் வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும்